ஊதிய உயர்வு கோரி வங்கி ஊழியர்கள் 2 ஆம் நாள் வேலைநிறுத்தம்

ஊதிய உயர்வு கோரி வங்கி ஊழியர்கள் மேற்கொண்டுள்ள 2 ஆம் நாள் வேலைநிறுத்தத்தால், வங்கிப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

சென்னை : மே-31

இந்திய வங்கிகள் கூட்டமைப்புடன் வங்கி ஊழியர் சங்கங்கள் கடந்த 5ஆம் தேதி நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், 22 பொதுத்துறை வங்கிகளைச் சேர்ந்த சுமார் 10 லட்சம் ஊழியர்கள் இரண்டுநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 21 பொதுத்துறை வங்கிகள், 13 தனியார் வங்கிகள், ஆறு பன்னாட்டு வங்கிகள், 56 கூட்டுறவு கிராமப்புற வங்கிகள், இந்த போராட்டத்தில் பங்கேற்றதாக வங்கி ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. கேரளா, மேற்குவங்கம், பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இந்தப் போராட்டம் முழுஅளவில் நடைபெற்று வருகிறது. வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தப்போராட்டத்தால் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கான பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில் கண்காணிப்பு அமைப்பான அசோசெம் அறிவித்துள்ளது.

Related Posts