ஊதிய உயர்வு கோரி வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்

ஊதிய உயர்வு கோரி வங்கி ஊழியர்கள் இன்றும், நாளையும் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதால் வங்கிச் சேவை பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை : மே-30

இந்திய வங்கிகள் கூட்டமைப்புடன் வங்கி ஊழியர் சங்கங்கள் கடந்த 5ஆம் தேதி நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இந்நிலையில், 22 பொதுத்துறை வங்கிகளைச் சேர்ந்த சுமார் 10 லட்சம் ஊழியர்கள் இரண்டுநாள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கான சம்பள தேதியில் இந்த வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் வங்கி சேவைகள் தொடரும் என்பதால், அவற்றின் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts