ஊழல் அரசியல் பிணியைத் தீர்க்கும் மருந்து “லோக் ஆயுக்தா” : கமல்ஹாசன்

 

 

லோக் ஆயுக்தா, ஊழல் அரசியல் பிணியைத் தீர்க்கும் மருந்து என மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை, ஏப்ரல்-19

தமிழகத்தில் லோக் ஆயுக்தா நீதிமன்றம் அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை, நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வரவேற்றுள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டர் கமல் கூறியிருப்பதாவது ;-

“உச்சநீதிமன்றத்திற்குத் தமிழ்நாட்டில் உள்ள நேர்மையாளர்களின் மனமார்ந்த நன்றி. இந்த அரசு, உச்சநீதிமன்ற ஆணையை ஏற்று செயல்பட மக்கள் வலியுறுத்த வேண்டும். லோக் ஆயுக்தா, ஊழல் அரசியல் பிணியைத் தீர்க்கும் மருந்து”

இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

 

 

Related Posts