எகிப்து நாட்டின் அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார் அப்துல் சிசி

எகிப்து நாட்டின் நடைபெற்ற அதிபர் தேர்தலில் சுமார் 97 சதவிகித வாக்குகள் பெற்ற அப்துல் சிசி மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

எகிப்து : ஏப்ரல்-03

எகிப்து நாட்டில் அதிபர் தேர்தல், கடந்த 26 ஆம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிபர் அப்துல் சிசி மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து மவுசா முஸ்தபா போட்டியிட்டார். இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், தற்போதைய அதிபர் அப்துல் சிசி பதிவான வாக்குகளில் சுமார் 97 சதவிகிதம் வாக்குகள் பெற்றார். இதன்மூலம் அவர் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனால், வரும் 2022-ம் ஆண்டு வரை அவர் எகிப்து நாட்டின் அதிபர் பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts