எகிப்து முன்னாள் அதிபரின் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்:  துருக்கி அதிபர் வலியுறுத்தல்

எகிப்து நாட்டில் ஜனநாயக முறையில் முதல் முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டவர் முகமது மோர்சி. . இவரை அதிபர் பதவியில் இருந்து நீக்க கடந்த 2013-ம் ஆண்டு கடுமையான போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, அந்நாட்டு ராணுவம் அவரை வலுக்கட்டாயமாக பதவியில் இருந்து நீக்கியது. மேலும், அதிபர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தியவர்களை கொன்ற குற்றத்திற்காக, முகமது மோர்சிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் பல வழக்குகள்  அவருக்கு எதிராக நிலுவையில் இருந்தன. இதனிடையே வழக்கு விசாரணைக்காக மோர்சி கடந்த திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது திடீரென நீதிமன்றத்திலேயே மயங்கி விழுந்தமோர்சியை.மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே உயிரிழந்தார். அவரது உடலை உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர்கள் மாரடைப்பால் உயிரிழப்பு ஏற்பட்டதாக தெரிவித்தனர். ஆனால், முகமது மோர்சி கொலை செய்யப்பட்டதாகஅவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.  இந்நிலையில், ஜப்பானில் உள்ள ஒசாகா நகரில் நடைபெற்ற ஜி20  உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த துருக்கி அதிபர் எர்டோகன்,  எகிப்து முன்னாள் அதிபர் முகமது மோர்சியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இந்த விசாரணையை ஐக்கிய நாடுகள் சபையும் உலக நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும் வலியுறுத்த வேண்டும்’ எனவும் குறிப்பிட்டார்.

Related Posts