எங்களை தாக்கினால் போர் வெடிக்கும் : ஈரான்

சவுதி எண்ணெய் கிணறுகள் தாக்கப்பட்ட விவகாரத்தில் தங்களைத் தாக்கினால் போர் வெடிக்கும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவித் ஷெரீப் கூறும்போது,  சவுதி மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துடன் இருக்கும் பிரச்னைகளைப் பேசித் தீர்த்துக் கொள்ளமுடியும் என்றும் ஆனால் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா முட்டுக்கட்டை போடுவதாகவும்  குற்றம் சாட்டியுள்ளார். சவுதியின் எண்ணெய் கிணறுகள் தாக்கப்பட்ட விஷயத்தில் தங்களுக்குத் தொடர்பில்லை என்று திட்டவட்டமாக மறுத்த ஷெரீப், தங்கள் மீது போர்  திணிப்பை ஏற்படுத்தினால் அது முழு அளவிலான போராக மாறும் என எச்சரித்தார்.

Related Posts