எங்கள் அடுத்த இலக்கு ககன்யான் திட்டம் : இஸ்ரோ தலைவர் சிவன்

சந்திரனில் உள்ள விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

நிலவை ஆராய்வதற்கு சந்திரயான் 2 விண்கலத்தை ஜூலை 22 ஆம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. இதனையடுத்து, நிலவின் சுற்றுவட்டப்பாதையில் இயங்கிக்கொண்டிருந்த சந்திராயன் 2 விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர் செப்டம்பர் 7 ஆம் தேதி நிலவில் தரையிறக்கப்பட்டது. அப்போது, ஏற்பட்ட தொழிட்நுட்ப கோளாறு காரணமாக இஸ்ரோவுடனான தொடர்பை இழந்தது. இது இந்திய விஞ்ஞானிகளிடையே மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் விக்ரம் லேண்டருடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ கடுமையாக முயற்சி செய்தது. அந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன் விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். நிலைவை ஆராயும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார். மேலும் அடுத்த திட்டமான ககன்யான் திட்டதுக்கு விஞ்ஞானிகள் உழைத்து வருவதாகவும் அவர் கூறினார்.

 

 

Related Posts