எச்.ராஜா கைது செய்யப்படாததற்கு மோடி அரசிடம் தமிழக அரசுக்கு இருக்கும் அச்சமே காரணம்

எச்.ராஜா கைது செய்யப்படாததற்கு மோடி அரசிடம் தமிழக அரசுக்கு இருக்கும் அச்சமே காரணம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

நெல்லை மாநகர மாவட்ட மதிமுக செயலாளர் நிஜாம் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட மதிமுக பொதுச் செயலாளர்; வைகோ  மணமக்கள் அகமது – யாஸ்மின் ஜமீமா ஆகியோரின் திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் பசுமைத் தீர்ப்பாயம் நியமித்துள்ள  முன்னாள் நீதிபதி தருண் அகர்வால்தலைமையிலான குழுவினர்,; தாமிர கழிவுகள் கொட்டப்பட்டுள்ள உப்பாற்று ஓடை பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததாகவும், அந்த கசடுகள் மீது ஆலை நிர்வாகம் செம்மண் போட்டு மூடி மறைத்து உள்ளதாகவும் கூறினார்.  இன்று மக்களின் கருத்தை அறிந்த ஆய்வுக்குழு  நாளை பசுமைத் தீர்ப்பாய அலுவலகத்தில் வழக்கு தொடா;ந்தவர்களின் கருத்தை கேட்க உள்ளதாகவும், இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்க உள்ளதாகவும் வைகோ கூறினார். ஓட்டு மொத்த பொதுமக்களும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உள்ளதாக அவர் தெரிவித்தார்.  சமுக ஒருங்கிணைப்பை சீர்;குலைக்கும் வகையில்  பேசியுள்ள எச்.ராஜாவும் கருணாசும் கைது செய்யப்படவேண்டும் என்று கூறிய வைகோ,  இதுவரை எச்.ராஜா கைது செய்யப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டினார். மோடி அரசுக்கு அஞ்சி நடுங்கி தமிழக அரசு தனதுசுயமரியாதையை இழந்து செயல்படுவதாக அவர் தெரிவித்தார்.   எந்த சமயத்தின் நம்பிக்கையிலும் குறுக்கீடு செய்யக் கூடாது எனவும்,  முத்தலாக் தடைச்சட்டம்  இஸ்லாமிய மக்களின் மனதில் வேதனையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார். சிறுபான்மை மக்களுக்கு மதச்சார்பின்மைக்கும் எதிராக செயல்படும் மத்திய அரசு, தமிழகத்தில் இந்துத்துவாவை நிலைநாட்ட முயற்சிக்கிறது எனவும் அது ஒருபோதும் நடக்காது எனவும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உறுதிபட தெரிவித்தார்.

Related Posts