எச். ராஜா மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும்: தொல்.திருமாவளவன்

எச். ராஜா மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும் என  தமிழக அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை அவதூறாக பேசிய எச்.ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி சென்னை, கோயம்பேட்டில் சாலைமறியலில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் முதன்மை செயலாளர் ஏ.சி.பாவரசு, தமிழக அரசு உடனடியாக எச்.ராஜாவை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்எனக்கூறினார்.

தொல்.திருமாவளவனை அவதூறாக பேசிய எச்.ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி அக்கட்சியின்தலைமை நிலையச் செயலர் தகடூர் தமிழ்ச்செல்வன் மற்றும்  துணைப் பொதுச்செயலாளர் வன்னிஅரசு ஆகியோரது தலைமையில், சென்னை காவல்துறை தலைமை இயக்குனரிடம் புகார் மனு அளித்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தகடூர் தமிழ்ச்செல்வன்,

எச்.ராஜா மீது  காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கத் தவறினால் சட்டபூர்வமாக நீதிமன்றத்தைஅணுகப்போவதாகத் தெரிவித்தார்.

Related Posts