எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

 தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது.முதல்வர் பழனிசாமி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கூவத்தூர் சொகுசு விடுதியில் ஒன்றாக தங்க வைக்கப்பட்டு வாக்கெடுப்பிற்கு அழைத்து வரப்பட்டனர். இதில் முதலமைச்சர் பழனிசாமி வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக கூவத்தூர் சொகுசு விடுதியில் இருந்து தப்பி வந்த சட்டமன்ற உறுப்பினர் சரவணன் அங்குள்ள சட்டமன்ற உறுப்பினருக்கு பணமும் தங்கமும் கொடுத்ததாக கூறியதை சுட்டிக் காட்டி சிபிஐ விசாரணை வேண்டும் என பாமக தலைவர் ஜி.கே. மணி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் வினித் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இதே போல் சமூக ஆர்வலர் ட்ராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கு ரத்து செய்யப்பட்டதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Posts