எடப்பாடி பழனிசாமி நாவடக்கத்துடன் பேச வேண்டும்:திருச்சி சிவா எச்சரிக்கை

சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,  எடப்பாடி பழனிசாமி எப்படி முதல் அமைச்சர் ஆனார் என்று தமிழக மக்கள் அனைவருக்குமே தெரியும் என்றார்.  அதை மறந்துவிட்டு தான்தோன்றித்தனமாக திமுக தலைவர் ஸ்டாலினை ஒருமையில் பேசி வருவதுடன்,  காது ஜவ்வு கிழிந்து விடும் என அநாகரிகமானபேச்சுக்களை முதல்வர்  நாள்தோறும் பேசி வருகிறார் என்றும் அவர் தெரிவித்தார். கட்சியின் கொள்கை கோட்பாடுகளுக்கு கட்டுப்பட்டு  அமைதி காத்து வருவதாகவும் முதல்வர் இதை புரிந்து கொண்டு  நாவடக்கத்துடன்பேச வேண்டும் எனவும் அவர் எச்சரித்தார். ஆர்கே நகர் இடைத்தேர்தலின்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் திருஉருவ படத்தினை சவப்பெட்டியாக வைத்து ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இருவரும் தரங்கெட்ட அரசியல் செய்தார்கள் என அவர் சாடினார். திமுகவையும், அதன் தலைவர் ஸ்டாலினையும் பேசுவதற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு எந்த தகுதியும் இல்லை என்று திருச்சி சிவா கூறினார்.

Related Posts