எண்ணை உற்பத்தியை அதிகரிக்க சவுதிஅரேபியா ஒப்புதல்: அமெரிக்க அதிபர் டிரம்ப் 

ஈரானின் அணு ஆயுத உற்பத்தி பிரச்சினையால் 2015-ம் ஆண்டு ஈரானுடன் செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த ஆண்டு விலகியது. மேலும் ஈரானில் எண்ணை வருவாயை முடக்கும் வகையில் அந்நாட்டிடம் இருந்து கக்சா எண்ணை இறக்குமதி செய்யும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கபோவதாக அமெரிக்கா மிரட்டல் விடுத்தது.

எனினும் இந்தியா, சீனா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு மட்டும் விலக்கு அளித்த அமெரிக்கா,  6 மாதங்களுக்குள் ஈரானிடம் இருந்து எண்ணை வாங்குவதை படிப்படியாக குறைத்துக் கொள்ள வேண்டும் என நிபந்தனை விதித்தது. அதன்படி வருகிற 2-ந் தேதியுடன் கெடு முடிவடைகிறது. இந்நிலையில், இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு மேலும் சலுகையை நீடிக்க முடியாது என  அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் இந்த முடிவை ஏற்றுக்கொண்டால் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படுவதுடன் விலையும் கணிசமாக உயரும் அபாயம் உருவாகியுள்ளது. இதற்கு தீர்வுகாணும் வகையில்  அதிபர் டிரம்ப் சுட்டுரையில்வெளியிட்டுள்ள  செய்தியில், ஈரானிடம் இருந்து எண்ணை இறக்குமதி செய்யும் நாடுகள் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும், .சவுதி அரேபியா மற்றும் ‘ஒபெக்’ அமைப்பில் உள்ள நாடுகள் தனது வேண்டுகோளை ஏற்று எண்ணை உற்பத்தியை அதிகரிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Posts