எதிரிகளாக இருந்த வடகொரிய-தென்கொரிய அதிபர்கள் சந்திப்பு

 

 

இருபெரும் எதிரிகளாக இருந்த வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் அன்னும், தென் கொரியாவின் அதிபர் மூன் ஜேவும் சந்தித்துப் பேசினர்.

ஏப்ரல்-27 

வட கொரியா, தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக பனிப்போர் நீடித்து வந்தது. சமீபத்தில் தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் மூலம் இரு நாடுகள் இடையேயான பகை விலகத்தொடங்கியது. அதன்பின்னர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன்னும், தென் கொரியாவின் அதிபர் மூன் ஜே இன்னும் உச்சி மாநாட்டில் சந்தித்துப் பேச முடிவானது. இந்நிலையில் திட்டமிட்டபடி இரு தலைவர்கள் பங்கேற்ற உச்சி மாநாடு இன்று தொடங்கியது. இரு நாடுகளின் எல்லையையொட்டி தென்கொரிய பகுதியில் உள்ள பன்முஞ்சோமில் நடைபெற்ற இந்த மாநாட்டின் தொடக்கத்தில், இரு நாட்டு தலைவர்களும் ஒருவரையொருவர் கைகுலுக்கி பரஸ்பரம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். இது இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவின் புதிய தொடக்கமாக அமைந்தது. இந்த மாநாட்டில் எடுக்கப்படும் தீர்மானம், இரு நாடுகள் இடையேயான கொரியப்போரை முறைப்படி முடிவுக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts