எதிரிகள் வாலாட்டினால் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் : அமைச்சர் ராஜ்நாத் சிங்

எதிரிகள் வாலாட்டினால் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார்.

அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் கந்தேரி, இந்திய கடற்படையில் இணைக்கும் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு நீர்மூழ்கி கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார். அப்போது பேசிய அவர், ஐஎன்எஸ் கந்தேரி நீர்மூழ்கிக் கப்பலை இணைத்திருப்பதன் மூலம் இந்திய கடற்படையின் வலிமை மேலும் பெருகியிருப்பதாகக் குறிப்பிட்டார். எதிரிகள் வாலாட்டினால் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்த அவர், ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சிப்பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கடற்படை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் உள்ளிட்ட அதிகாரிகளும் உடனிருந்தனர்.

Related Posts