எதிர்கட்சிகளை குறிவைத்து வருமானவரி சோதனை நடத்துகின்றனர்: சந்திரபாபு நாயுடு

மக்களவைத் தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தவிர்க்கும் பொருட்டு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல் ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரிசோதனை நடப்பதாக தகவல் வெளியானது. தேர்தல் சமயத்தில் அச்சுறுத்தும் நோக்கில், வருமான வரித்துறை சோதனை நடப்பதாக கூறி எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில் விஜயவாடாவில் ஆந்திரா முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது எதிர்க்கட்சிகளை குறிவைத்து வருமானவரித்துறை சோதனை நடைபெறுவதாக அவர் குற்றம்சாட்டினார். தேர்தல் அறிவித்தபின் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படியே அனைத்தும் நடக்க வேண்டும் என்றும், ஆனால் பிரதமர் உத்தரவின்பேரிலே இது போன்ற சோதனை நடப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Posts