எதிர்கால தலைமுறைக்கு பாதுகாப்பான சூழ்நிலை உருவாக்குவது அனைவரது கடமை: ஆவடியில் சர்வதேச கருத்தரங்கம்

சென்னை ஆவடியை அடுத்த தனியார் பல்கலைகழகத்தில் உலகளாவிய பருவ நிலை மாற்றம் நிலையான முன்னேற்றம் என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் பொதுவியல் துறை சார்பில் நடைபெற்றது. இக்கருத்தரங்கை ஜப்பான் கும்மோட்டோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி ராஜி அடேவா தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், எதிர்கால தலைமுறைக்கு பாதுகாப்பான சூழ்நிலை உருவாக்குவது அனைவரது கடமை எனக் கூறினார். இந்த கருத்தரங்கில் 122  ஆராய்ச்சி கட்டுரைகள் தொகுத்து புத்தகமாக வெளியிடபட்டது. மேலும் பல்வேறு  நாடுகலிருந்து 100கும் மேற்ப்பட்ட பிரதிநிதிகள் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு தங்கள் ஆய்வு கட்டுரைகளை பகிர்ந்து கொண்டனர். இதில் மலேசியா கிஸ்வா பொறியியல் துறை பேராசிரியர் சாய்னா கங்காதரன், மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் துணை இயக்குநர் சாய் பிரசாத்,பேராசிரியர் சாந்த குமார்,பேராசிரியர் வெங்கட் ரெட்டி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Posts