எதிர்கால திட்டங்களில் நாசாவும் இஸ்ரோவும் இணையும்

எதிர்கால திட்டங்களில் இணைந்து பணியாற்றத் தயாராகவுள்ளதாக இஸ்ரோவிடம், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கூறியுள்ளது.

விக்ரம் லேண்டர் நிலவின் தரைப்பகுதியில் இருந்து 2.1 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபோது சிக்னல் துண்டிக்கப்பட்டது. சிக்னலை மீட்க அனைத்து முயற்சிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், நிலவில் தரையிறங்கும் இஸ்ரோவின் முயற்சிக்கு அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா  பாராட்டு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நாசா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், விண்வெளி ஆய்வு மிகவும் கடினமானது என குறிப்பிட்டுள்ளது. நிலவின் தென் பகுதியில் ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான் 2 திட்ட முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் என கூறியுள்ள நாசா, எதிர்கால  திட்டங்களில் தங்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக பதிவிட்டுள்ளது. இதே போல் இஸ்ரோவின் முயற்சிகளுக்கும், அர்ப்பணிப்புக்கும் ஆஸ்திரேலிய விண்வெளி ஆராய்ச்சி மையமும் பாராட்டியுள்ளது. விக்ரம் லேண்டரானது நிலவுக்கு சில கிலோ மீட்டர் தொலைவில் இருந்ததை சுட்டிக்காட்டியுள்ள ஆஸ்திரேலியா,  இஸ்ரோவின் ஆய்வுகள் தொடர வாழ்த்து கூறியுள்ளது. இஸ்ரோவின் முயற்சிக்கு ஐக்கிய அரபு அமீரகம் உறுதுணையாக இருக்கும் என அந்நாட்டின் விண்வெளி ஆய்வு மையம் கூறியுள்ளது.

Related Posts