எதிர்க்கட்சிகள் கடும் அமளி: மக்களவை, மாநிலங்களவை நாள்முழுவதும் ஒத்திவைப்பு

 

 

காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

டெல்லி, ஏப்ரல்-02

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 5-ம் தேதி தொடங்கியதில் இருந்து எதிர்க்கட்சிகளின் அமளியால் அவை நடவடிக்கைகள் தொடர்ந்து முடங்கி உள்ளன. இந்த பரபரப்பான சூழ்நிலையில் நான்கு நாட்கள் இடைவெளிக்குப் பிறகு நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடியது. மக்களவையில்  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, அ.தி.மு.. எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அதிருப்தியடைந்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன், அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார். இதேபோல் மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி காரணமாக அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.  இதனிடையே, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை நாடாளுமன்றத்தில் போராட்டம் தொடரும் என்றார்.

Related Posts