எதிர்க்கட்சியாகவும் காங்கிரஸ் தோல்வி அடைந்துவிட்டது: மோடி

வாக்குவங்கி அரசியலில் ஈடுபடும் காங்கிரஸ், எதிர்க்கட்சியாகவும் தோல்வி அடைந்து விட்டதாக பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில்  கலந்து கொண்டு பேசிய அவர், ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு வலிமையான எதிர்க்கட்சி இருக்க வேண்டியது அவசியம் என்றார். ஆனால் 60 ஆண்டு காலம் நாட்டை ஆட்சி செய்ததில் தோல்வி அடைந்ததோடு மட்டுமின்றி, எதிர்க்கட்சியாகவும் காங்கிரஸ் தோல்வி அடைந்து விட்டதாக அவர் சாடினார். வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடும் கட்சிகள் பதவிக்கு வந்தால், அரசு அதிகாரிகளிடமும் பிளவை ஏற்படுத்தி, அதிகாரத்துவத்தை அழித்து விடுவார்கள் என அவர் கூறினார். வாக்கு வங்கி அரசியல் வளர்ச்சிக்கு தீங்கானது என்ற பிரதமர் மோடி, 60 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் நடைமுறைபடுத்திய  வாக்கு வங்கி அரசியலே கடும் பிரச்சனைகளுக்கு வழிவகுத்தாக குறிப்பிட்டார்.  . நாட்டிற்கு தாம் பிரதமராக இருந்த போதும், பாஜகவில் சாதாரண தொண்டனாகவே இருப்பதாகவும்,பாஜக தலைமை வழங்கும் எந்த பொறுப்பையும் ஏற்று பணியாற்ற தாம் தயாராக இருப்பதாக மோடி தெரிவித்தார்.

Related Posts