எத்தனால் மீதான வரியை குறைக்க ஒப்புதல் அளிக்க முடியாது: அமைச்சர் ஜெயக்குமார்

 

 

எத்தனால் மீதான வரியை குறைக்க தமிழகம் ஒப்புதல் அளிக்காது  என்று, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் 27-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம், இன்று காணொலி மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அந்தந்த மாநிலங்களின் சார்பில் அமைச்சர்கள் காணொலி மூலம் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் எத்தனால் மீதான வரியை மட்டுமே குறைக்க முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்திற்குப் பிறகு, சென்னை தலைமைச்செயலகத்தில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், எத்தனால் மீதான வரியை 18% லிருந்து 12% ஆக குறைக்க தமிழகம் ஒப்புதல் அளிக்காது என்றார். எத்தனால் மீதான வரியை குறைத்தால் மாநில அரசின் வருவாய் பாதிக்கும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Related Posts