எந்த மாநிலமும் எட்ட முடியாத இடத்தை தமிழகம்

கல்வியில் எந்த  மாநிலமும் எட்ட முடியாத இடத்தை தமிழகம் பிடித்து இருக்கிறது என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம் காந்திகிராமத்தில் முதலமைச்சரின் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பொது மக்களிடம் மனுக்களை பெற்றார். அப்போது பேசிய அவர் காவிரி ஆற்றில் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள கதவணை அமைக்க முதல்வர் நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், சுமார் ஒரு டி.எம்.சி அளவில் தண்ணீர் தேங்ககூடிய அளவிலான கதவணை கட்டி முடிக்கப்பட்டால் மாவட்டத்திற்கு  குடிநீர் பிரச்சனை இருக்காது எனவும் தெரிவித்தார்.

Related Posts