எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவை மு.க.ஸ்டாலின் புறக்கணிப்பது வருத்தம் அளிக்கிறது

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவை மு.க.ஸ்டாலின் புறக்கணிப்பது வருத்தம் அளிப்பதாக மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

            கரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவை தி.மு.க. புறக்கணிப்பது வருத்தம் அளிப்பதாகவும், இது அரசு விழா என்பதால் அவர்கள் பங்கேற்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். மக்களோடு மக்களாக இணைந்து செயலாற்றியதை பார்த்து அப்போதைய காங்கிரஸ் அரசு எம்.ஜி.ஆருக்கு பாரத ரத்னா விருது வழங்கியது எனவும், அதேபோல் கருணாநிதியும், எம்.ஜி.ஆருடன் நெருங்கிய நட்பில் இருந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்தார். எம்.ஜி.ஆர். தனியாக கட்சி தொடங்கி ஆட்சியை பிடித்து இருக்காவிட்டால் தேசிய கட்சிகள் வலுவாக காலூன்றி இருக்கும் எனவும், தமிழகத்தில் என்றும் திராவிட கட்சிகள் ஆட்சி செய்வதற்கான ஒரு சூழலை உருவாக்கியவர் எம்.ஜி.ஆர் எனவும் அவர் குறிப்பிட்டார். அண்ணாவுக்கு பிறகு கருணாநிதியை முதல்- அமைச்சராக்க பணியாற்றியவர் எம்.ஜி.ஆர் எனவும், அந்த நன்றியை மு.க.ஸ்டாலின் மறந்து விடக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார். எனவே கட்சி ரீதியாக பார்க்காமல் இதை அரசு விழாவாக கருதி மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

Related Posts