எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அழைப்பிதழில் மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரன் ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றுள்ளன

சென்னையில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அழைப்பிதழில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் பெயர்களுடன் மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரன் ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

      தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழா  மாவட்டங்கள்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் நிறைவு விழா வரும் 30-ந்தேதி சென்னையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறுகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் இதில் பங்கேற்கின்றனர். இதற்காக அச்சடிக்கப்பட்டுள்ள அழைப்பிதழில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரது பெயர்களுடன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்,  மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி  ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றுள்ளன. அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளரும் ஆர்.கே.நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான டி.டி.வி. தினகரன் பெயரும் அழைப்பிதழில் உள்ளது. இதன்மூலம் மு.க.ஸ்டாலின்,  தினகரன் ஆகியோர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்பார்களா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Related Posts