எம்.ஜி.ஆர் பேனர்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கென மிகப்பெரிய அளவிலான பிளக்ஸ் பேனர்கள்சென்னையில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தன.. இதுதொடர்பாக டிராபிக் ராமசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கென அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது..மேலும், பேனர்களை அமைக்க முறையாக அனுமதி வழங்கும் போது, நீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் என நீதிபதிகள்அறிவுறுத்தினர்.  இந்த விவகாரம் தொடர்பாக அக்டோபர் 8-ம் தேதி சென்னை மாநகர காவல்துறை மற்றும் மாநகராட்சி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Posts