எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆயுஷ் மருத்துவம் அமைக்க திட்டம்

இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆயுஷ் மருத்துவமனை அமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய இணையமைச்சர் ஸ்ரீபத் யசோ நாயக் தெரிவித்துள்ளார்.

சென்னை : மே-02

சென்னை அண்ணாநகரில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரியில், மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சி மையத்தை மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் ஸ்ரீபத் யசோ நாயக் திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். விஜயகுமார், சட்டமன்ற உறுப்பினர் மோகன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் ஸ்ரீபத் யசோ நாயக், இயற்கை மருத்துவத்தை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆயுஷ் மருத்துவம் அமைக்க திட்டம் உள்ளது என்று கூறிய அவர், இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆயுஷ் மருத்துவமனை அமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

Related Posts