எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்காதது அதிர்ச்சியளிக்கிறது

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்காதது அதிர்ச்சியளிப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

        சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மத்திய அரசு தற்போது, குறைந்த விலைக்கு ரபேல் போர் விமானம் வாங்குவதாக இருந்தால்,ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட குறைத்து வாங்குவது ஏன்? என கேள்வி எழுப்பினார். மேலும், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு என்ன ஆளுமை உள்ளது என கேள்வி எழுப்பிய அவர், 3 ராணுவ அமைச்சர்கள் இருந்தும் உருப்படியாக எதுவும் செய்யப்படவில்லை என குற்றம் சாட்டினார். ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் முறைகேடு  நடந்திருப்பது மற்றவர்களுக்கு தெரிந்திருந்தும், தேர்தல் ஆணையத்திற்கு தெரியவில்லை என்பது வருத்தமளிப்பதாகவும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்காதது அதிர்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருப்பதாக கூறிய ப.சிதம்பரம், மக்களவை தேர்தலுக்கான பணியை காங்கிரஸ் தொடங்கியுள்ளதாகவும், நாட்டு மக்களிடம் கருத்துகள் கேட்டு, புதிய திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் அறிமுகப்படுத்தபட உள்ளதாகவும் கூறினார்.

Related Posts