எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை தோப்பூரில் அமைவது உறுதி

எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை தோப்பூரில் அமைவது உறுதி என அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் நடைபெற்று கொண்டிருப்பதாகவும், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கண்டிப்பாக அமையும் எனவும் தெரிவித்தார். 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் டிடிவி தினகரன் தேர்தல் பணியில் ஈடுபட்டதாக நிரூபித்தால், அரசியலை விட்டு விலகி விடுவதாக அவர் தெரிவித்தார். நடிகர் விஜய் அரசியலில் குதித்து அடிப்படாமல் இருந்தால் அவர் சமத்து எனவும், சினிமா நடிகர்களுக்கு அரசியலில் ஈடுபடும் அளவுக்கும் பொறுமையும், சகிப்பு தன்மையும் கிடையாது எனவும் அவர் கூறினார். மேலும், முதல்வராக உள்ள பழனிச்சாமி மற்றும் ஓபி.எஸ் ஆகியோர் அரை நூற்றாண்டு காலம் அரசியலில் தொண்டராக இருந்ததை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ் செல்வன், தமிழகத்தில் தற்போதைய நிலையைதான் நடிகர் விஜய் பேசியுள்ளதாக தெரிவித்தார். 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் என கூறிய அவர், இந்த பயத்தினால் தான் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிமுக அரசு முயற்சிப்பதாக கூறினார். மேலும், இந்த விவகாரத்தில், உரிய நடவடிக்கை எடுக்க தவறினால், சட்டப்பேரவை தலைவர் மீதும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் சூழ்நிலை உருவாகும் என தங்கதமிழ் செல்வன் தெரிவித்தார்.

Related Posts