எல்லா திட்டங்களையும் எதிர்க்கட்சிகள் எதிர்க்கிறது: மோடி குற்றச்சாட்டு

 

 

அரசின் அனைத்து திட்டங்களுக்கும் எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போடுவதாக,  பிரதமர் நரேந்திரமோடி குற்றம்சாட்டியுள்ளார்.

பீகார் மாநிலம் மோதிஹரி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, 6 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.

பிரான்ஸ் நாட்டின் தொழில்நுட்ப உதவியுடன் பீகார் மாநிலத்தில் உள்ள மாதேபுரா பகுதியில் ரெயில் ரெயில் பெட்டிகளை தயாரிக்கும் புதிய தொழிற்சாலை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது, ஆண்டுக்கு சுமார் 110 பெட்டிகளை தயாரிக்கும் செயல்திறனை கொண்ட இந்த தொழிற்சாலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

முசாபர்பூர்-சகவுலி பகுதிகளுக்கு இடையில் சுமார் 2400 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் 100.6 கிலோமீட்டர் தூரம் வரையிலான இரட்டை வழித்தடப்பாதைக்கும் சகவுலி-வால்மிகி இடையில் 109.7 கிலோமீட்டர் தூரம் வரையிலான இரட்டை வழித்தடப்பாதைக்கும் அடிக்கல் நாட்டினார்.

மேலும், பீகார் மாநிலத்தின் கத்திஹார்-பழைய டெல்லி இடையே சம்ப்ரான் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் என்னுன் புதிய ரெயில் சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், பீகாரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் எட்டரை லட்சத்திற்கும் அதிகமான கழிவறைகள் கட்டுப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார். தெருக்கள் முதல் நாடாளுமன்றம் வரை அரசு திட்டங்களுக்கு எதிர்க்கட்சிகள் தடை போடுவதாக பிரதமர் நரேந்திரமோடி குற்றம்சாட்டினார்.

இதனிடையே, எஸ்.சி. எஸ்,டி. பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கிட கோரி பீகாரில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த மோதலில் பல்வேறு பகுதிகளில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயா மாவட்டம் மன்புர் பகுதியில் போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

Related Posts