எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் கைது

எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது

.எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், படகுகளை சேதப்படுத்தி  கடுமையாக தாக்கி விரட்டி அடிப்பதும்  தொடர் கதையாக உள்ளது.  இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்திலிருந்து நேற்று கடலுக்கு மீன்பிடிக்க இரு படகுகளில் சென்ற 13 மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக  கூறி இலங்கை கடற்படை கைது செய்தது. . மேலும், மீனவர்களின் 3  படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. இந்நிலையில், இன்று  ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த 5 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்கள் சென்ற விசைப்படகையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படை  கைதான மீனவர்களை மன்னார் முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை  நடத்தி வருகிறது. இந்தச் சம்பவம் தமிழக மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts