எஸ்.வி.சேகரை காவல்துறையிடம் பிடித்துக் கொடுப்பது தமது வேலை அல்ல

எஸ்.வி.சேகரை காவல்துறையிடம் பிடித்துக் கொடுப்பது தமது வேலை அல்ல என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை : மே-14

பெண் பத்திரிகையாளர்களை இழிவு படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் கீழ்த்தரமான கருத்துக்களை பதிவு செய்த நடிகர் எஸ்.வி.சேகர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கிடைக்காமல் தலைமறைவாக உள்ள எஸ்.வி.சேகர் சென்னை தி.நகரில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் கட்சியின் தலைவர் தேவநாதன் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டார். தேவநாதனுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன்மத்திய இணையமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரையும் சந்தித்து எஸ்.வி.சேகர் சந்தித்து பேசினார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன்எஸ்.வி.சேகர் மீது கட்சி மேலிடம்தான் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறினார்.

நடிகர் எஸ்.வி.சேகர் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்  என்றும் நீதிமன்ற உத்தரவை மதிப்பது அரசின் கடமை  என்றும்,  மீன்வளத்துறை  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எஸ்.வி.சேகரை தாம் பார்த்ததாக கூறினார். எஸ்.வி.சேகரை கைது செய்வது தமிழக காவல்துறை வேலை தான் என்றும் அவரை பிடித்துக்கொடுப்பது தமது வேலையில்லை என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Related Posts