எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி – சென்னை உயர்நீதிமன்றம்

பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறு கருத்து பதிவிட்ட வழக்கில் எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை : மே-10

நடிகரும், பா.ஜ.நிர்வாகியுமான எஸ்.வி சேகர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அநாகரீக கருத்து ஒன்றை பகிர்ந்திருந்தார். இதற்கு அனைத்து தரப்பிலும் கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து தனது பதிவை நீக்கிய அவர் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார். இதுதொடர்பாக, எஸ்.வி சேகர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. எஸ்.வி சேகரை கைது செய்ய காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில், கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக முன்ஜாமீன் கோரி, எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்ஜாமீன் மனுவை தள்ளுப்படி செய்த நீதிமன்றம், எஸ்.வி. சேகரை கைது செய்யலாம் என தெரிவித்தது. இதனால், எஸ்.வி. சேகர் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts