ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயன்ற இருவர் கைது

ஓசூர் அருகே ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயன்ற இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

                கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை அடுத்த கொத்த கொண்டப்பள்ளியில் வாகனம் தயாரிக்கும் டிவிஎஸ் நிறுவனம் போன்ற பல தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைகளில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தொழிலாளர்களின் பணபரிவர்த்தனைக்கு வசதியாக தொழிற்சாலைக்கு முன்பு, பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்றிரவு மர்ம நபர்கள் இருவர் இந்த ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து உள்ளிருந்து பணத்தை கொள்ளையடித்தனர். அப்போது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் கையும், களவுமாக பிடிப்பட்டனர். இதை தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து, மத்திகிரி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts