ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூ.1 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வசூல்

 

 

நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூ.1 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் தொிவித்துள்ளது.

டெல்லி, மே-01 

இது தொடர்பாக இந்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;-

2018ம் ஆண்டில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 458 கோடி ஜி.எஸ்.டி. வசூல் செய்யப்பட்டுள்ளது. இகடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் மத்திய ஜிஎஸ்டி 18,652 கோடி ரூபாயும், மாநில ஜிஎஸ்டி 25, 704 கோடி ரூபாயும், ஐஜிஎஸ்டி 50,538 கோடி ரூபாயும் (இறக்குமதி பொருட்களுக்கு வசூலிக்கப்படும் வரியான 21,246 கோடி ரூபாய் சேர்த்து) , செஸ் வசூல் 8,554 கோடி ரூபாய்( இறக்குமதி மூலம் கிடைக்கும் வரி 702 கோடி ரூபாய் சேர்த்து) வசூலாகியுள்ளது. 
ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்த வணிகர்களில் 60 லட்சத்து 47 ஆயிரம் பேர், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கணக்கு தாக்கல் செய்துள்ளனர். ஜிஎஸ்டி வரி மூலம் கடந்த ஏப்ரல் மட்டும் ஒருலட்சத்து 3 ஆயிரத்து 459 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. 
இது பொருளாதார முன்னேற்றத்தை குறிப்பதாக அமைந்துள்ளது. 
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏப்ரல் மாதத்தில் ஜி.எஸ்.டி வசூலிக்கப்பட்ட ரூ .1 லட்சம் கோடி வசூலானது, ஒரு முக்கிய சாதனை ஆகும் என ஜெட்லி தனது டுவிட்டரில் குறிப்பிட்டு உள்ளார்.

Related Posts