ஏப்ரல் 5 – முழு அடைப்புப் போராட்டத்தில் மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி பங்கேற்கும்

 

 

ஏப்ரல் 5 – முழு அடைப்புப் போராட்டத்தில் மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, ஏப்ரல்-02
இது தொடர்பாக, மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி பொதுச்செயலாளர் துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது ;-
திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒரு மனதாக எடுத்த முடிவின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசாங்கத்தையும், அதற்குத் துணைபோய்க்கொண்டு இருக்கின்ற அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கத்தையும் கண்டிக்கக்கூடிய முறையிலும், உடனடியாக மத்திய அரசாங்கம் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும், 05.04.2018 அன்று நடைபெற இருக்கின்ற முழு அடைப்புப் போராட்டத்தில் மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் தொழிலாளர்கள் அனைவரும் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts