ஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் 17 பேர் பலி

ஏமன் நாட்டின் சடா மற்றும் டைஸ் பகுதியில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய விமானத் தாக்குதலில், 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஏமன் : ஏப்ரல்-10

ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் படையினர் கடந்த 2 ஆண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சனா உள்பட பலப்பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து அந்த பகுதிகளை சுற்றி சோதனைச் சாவடிகள் அமைத்துள்ளனர்.

இந்நிலையில், ஏமனின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள சடா நகரில் ஹவுத்தி புரட்சிப் படையினரை குறிவைத்து சவுதி கூட்டுப்படைகள் விமானத் தாக்குதல் நடத்தினர். இதேபோல், தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள டைஸ் நகரிலும் சவுதி கூட்டுப்படைகள் விமானத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட 17 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த ஏராளமானோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Posts