ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர்

ஏற்காட்டில் 43-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

சேலம்: மே-12

ஏழைகளின் ஊட்டி, மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடைவிழா நடப்பது வழக்கம். அதன்படி, ஏற்காடு அண்ணா பூங்காவில் அமைந்திருக்க கூடிய மலர் கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரிப்பன் வெட்டி தொடக்கி வைத்து, மலர்கண்காட்சியை பார்வையிட்டார்.

மேலும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாள் நினைவு வளைவு அமைப்பதற்காக அடிக்கல்லையும் முதலமைச்சர் நாட்டினார். இதனை தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதியையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இந்த விழாவில் அமைச்சர்கள் துரைக்கண்ணு, திண்டுக்கல் சீனிவாசன் , வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, அமைச்சர்கள், அதிகாரிகள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் பலர் கலந்து கொண்டனர்.

அண்ணா பூங்காவில் தோட்டக்கலைத்துறை சார்பில் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட மலர்களை கொண்டு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 10ஆயிரத்துக்கும் அதிகமான பூந்தொட்டிகளை கொண்டு மலர் கண்காட்சி திடலை அலங்கரித்துள்ளனர். மேலும், கார்நேசன் மலர்களால், அரசு தலைமை செயலகம், சேலம் விமானம் நிலையம், டிராக்டர், வாளியில் இருந்து பூக்கள் கொட்டுதல், பயணிகள், குழந்தைகள், மொபைலில் செல்பி எடுத்துக் கொள்ள மலர் அலங்கார வடிவமைப்புகள் செய்யப்பட்டுள்ளது.

Related Posts