ஏழுமலையானை வழிபட்ட பி.வி.சிந்து

சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற  பி.வி.சிந்து இன்று அதிகாலையில் ஏழுமலையானை வழிபட்டார்.

சாமி தரிசனத்திற்காக நேற்று மாலை திருப்பதிக்கு வந்த அவர், இன்று அதிகாலை நடைபெற்ற அபிஷேக சேவையில் கலந்துகொண்டு பெருமாளை சேவித்தார். பின்னர் பி.வி.சிந்துவிற்கு  தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்கள், நினைவு பரிசுகள் ஆகியவற்றை வழங்கினர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பி.வி.சிந்து, சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.

இதே போல் மத்திய சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்,  ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா ஆகியோர் குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தனர். தேவஸ்தான சிறப்பு அதிகாரி தர்மா ரெட்டி தீர்த்த  பிரசாதங்களை அவர்களுக்கு வழங்கி,  ரங்கநாதர் மண்டபத்தில் வேத பண்டிதர்கள் மூலமாக ஆசிர்வாதம் செய்து வைத்தனர்.

Related Posts