ஏழுமலையான்  கோயிலில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சுவாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான்  கோயிலில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சுவாமி தரிசனம் செய்தார்.

திருப்பதி : ஏப்ரல்-11

சென்னையில் இருந்து சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் திருப்பதி சென்ற அவர், நேற்றிரவு பத்மாவதி நகரில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கினார். இதையடுத்து, இன்று அதிகாலை ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற சுப்ரபாதம் மற்றும் அர்ச்சனை சேவையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து தங்க கொடிமரத்தை தொட்டு வணங்கினார். தேவஸ்தான அதிகாரிகள் அவருக்கு பிரசாதங்களை வழங்கினர்.

Related Posts