ஏழைகளுக்கான தேர்தல் அறிக்கையை ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார்: மு.க.ஸ்டாலின்

திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து

திருச்சியில் உள்ள உழவர் சந்தையில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டுஉரையாற்றிய அவர், அப்போதெல்லாம் வங்கியில் கொள்ளை அடிப்பார்கள் எனவும்,  இப்போது வங்கியையே கொள்ளை அடிக்கிறார்கள் எனவும் தெரிவித்தார். அப்போதெல்லாம் கோமாளிகள் சர்க்கஸில் இருப்பார்கள் எனவும்,  இப்போது சர்க்காரிலேயே இருக்கிறார்கள் எனவும் அவர் விமர்சித்தார். அப்போதெல்லாம் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன ஆனால் தற்போது விவசாயத்தையே தள்ளுபடி செய்கிறார்கள் எனவும் வேட்பாளர்கள் விலைக்கு வாங்கப்பட்ட நிலை போய் இப்போது கட்சியையே விலைக்கு வாங்கும் நிலை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பாஜக தேர்தல் அறிக்கை முரண்பாட்டின் மொத்த உருவம்  எனவும், ஆனால் ராகுல் காந்தி காங்கிரஸ் சார்பில் வெளியிட்ட தேர்தல் அறிக்கை ஏழை மக்களுக்கானது எனவும் தெரிவித்தார்.  மாநிலத்தில் சுய ஆட்சி மத்தியில் கூட்டாட்சி என்பதே திமுகவின் கொள்கை எனவும்  தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் எடப்பாடியின் வாழ்க்கையே கிழியப்போகிறது எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

Related Posts