ஏழை மக்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் சார்ந்த வேலை வழங்கப்படும்:மாயாவதி


சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் தமிழகத்தில், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும், 37 வேட்பாளர்களின் அறிமுக விழா நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் மாயாவதி கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், தேர்தலில் வெற்றி பெற, பா.ஜ., பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். கடந்த தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை, இன்னும் நிறைவேற்றவில்லை என்று கூறிய அவர்,  பொய் வாக்குறுதிகளை அளித்து, மக்களை, பாரதிய ஜனதா ஏமாற்றுகிறது என்று தெரிவித்தார்.

மத்தியில், பகுஜன் சமாஜ் ஆட்சி அமைய, தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு, யானை சின்னத்தில் ஓட்டளியுங்கள் என்று கூறிய அவர்,  மத்தியில், ஆட்சி வந்தததும், ஏழை எளிய மக்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் சார்ந்த, வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்று உறுதிபட தெரிவித்தார். மேலும், அரசு பணிகளில் காலியாக உள்ள, ஆதிதிராவிடர், பழங்குடியின ஒதுக்கீட்ட இடங்கள் அனைத்தும் நிரப்பப்படும்.
என்று மாயாவதி கூறினார்.

Related Posts