ஏ.ஆர்.முருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது

ஏ.ஆர்.முருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்ணியில் சமீபத்தில் வெளியான படம் சர்கார். இப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து விளக்கம் அளிக்கக் கோரி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, முருகதாஸ் மீதான முதல் தகவலறிக்கையின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என  காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

மேலும், பிரபலமானவர்கள் செய்தால் அது தப்பு, பிரபலமில்லாதவர்கள் செய்தால் அது தப்பில்லையா? என புகார்தாரரிடம் நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார். இவ்வழக்கு வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Posts