ஏ.டி.எம்.களில் பணத்தட்டுப்பாடு: மக்கள் புகார்

 

இந்தியாவில் பல மாநிலங்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஏடிஎம்களில் பணம் எடுக்க முடியாமல் அவதிப்பட்டு வருவதாக மக்கள் புகார் கூறியுள்ளனர். 

டெல்லி, ஏப்ரல்-17  

கர்நாடகா, மஹாராஷ்டிரா, ஆந்திரா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், தெலுங்கானா மற்றும் டில்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் பணம் கிடைக்காமல் மக்கள் அவமதிப்பட்டு வருகின்றனர். பெரும்பாலான ஏடிஎம்கள் பணம் இல்லாமல் மூடப்பட்டு உள்ளன. இதனால், தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து ஏராளமான மக்கள், சமூக வலைதளங்களில் புகார் கூறி வருகின்றனர். 

இதற்கிடையே, போதிய ரூபாய் நோட்டு இருப்பு உள்ளதாக தெரிவித்துள்ள மத்திய நிதித்துறை இணை மந்திரி எஸ்.பி. சுக்லா, ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பணத்தை கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 3 நாட்களில் பிரச்சனை சரிசெய்யப்படும் என அவர் தெரிவித்தார்.  

Related Posts