ஏ.டி.எம்.களில் பணப்பாற்றாக்குறை ஏற்படும் நிலை ?

ஏழு நாட்களுக்கு வங்கி சேவை பாதிக்கப்படும் சூழல் உள்ளதால், ஏ.டி.எம்.களில் பணப்பாற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது.

வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 28 ஆம் தேதி நான்காவது சனிக்கிழமை என்பதாலும், 29 ஞாயிற்றுகிழமை என்பதாலும் வங்கிகளுக்கு விடுமுறை. இதையடுத்து திங்கள் கிழமை அரையாண்டு நிறைவையொட்டி கணக்கு முடிக்கப்படுகிறது. பின்னர் அக்டோபர் ஒன்றாம் தேதி பெரும்பாலான ஊழியர்கள் விடுமுறையில் இருப்பார்கள். அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி விடுமுறையாகும். எனவே தொடர்ந்து 7 நாட்கள் வங்கி சேவைகள் முடங்கும் நிலையில் உள்ளது. இதனால் ஏ.டி.எம்-களில் பணப்பற்றாக்குறை ஏற்படும்.

Related Posts