ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சுமித் நகால் சாம்பியன் பட்டம்

அர்ஜென்டினா நாட்டில் நடந்த ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சுமித் நகால் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

அர்ஜென்டினாவின் பியுனோஸ் அயர்ஸ் நகரில் ஏ.டி.பி. சேலஞ்சர் பட்டத்திற்கான டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றது.  இதில், ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியில், அந்நாட்டின் பகுன்டோ போக்னிஸ், இந்தியாவை சேர்ந்த சுமித் நகால் ஆகியோர் மோதினர்.

ஒரு மணிநேரம் மற்றும் 37 நிமிடங்கள் நடந்த இப்போட்டியில், உலக தரவரிசையில் 161வது இடத்தில் உள்ள நகால், 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் போக்னிசை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். பியுனோஸ் அயர்ஸ் நகரில் நடந்த ஏ.டி.பி. சேலஞ்சர் போட்டியில் பட்டம் வென்ற முதல் ஆசியர் என்ற பெருமையை நகால் பெற்றுள்ளார்.

Related Posts