ஐஐடியில் நாளை நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு

சென்னை ஐஐடியில் நாளை நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார்.

சென்னை ஐஐடியின் 56வது பட்டமளிப்பு  விழா ஜூலை 19ம் தேதி நடைபெற இருந்தது. இந்த பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பிரதமர் வர முடியாத சூழலால் பட்டமளிப்பு விழா தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் பட்டமளிப்பு விழா நாளை நடைபெற உள்ளது. பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேச உள்ளார். பட்டமளிப்பு விழாவில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்கின்றனர். காலை 10 மணியளவில் சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் மூலம்  ஐஐடி வளாகத்துக்கு செல்கிறார். பட்டமளிப்பு விழா முடிந்தபின் பிற்பகலில் அவர் டெல்லி புறப்பட்டு செல்கிறார். பிரதமரின் வருகையையொட்டி, ஐஐடி வளாகத்தில் பிரத்யேக ஹெலிபேடு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை நகர் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

Related Posts