ஐகோர்ட்டு வளாகம் முழுவதும் சி.ஐ.எஸ்.எப். வீரர்கள் மூலம் பாதுகாப்பு வழங்கும் திட்டத்தை உருவாக்க உத்தரவு

 

 

சென்னை உயர்நீதிமன்ற வளாகம் முழுவதும் சி.ஐ.எஸ்.எப் வீரர்கள் பாதுகாப்பு வழங்கும் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற  நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் சரவணன் சதீஷ்குமார் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘உயர்நீதிமன்றம் , உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை மற்றும் மாவட்ட அளவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களின் வளாகத்துக்குள்,  வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்கும்,ஊர்வலம் செல்வதற்கும் தடை விதிக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.எம்.சுந்தரேஷ், டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் சக்திவேல் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை மற்றும் அனைத்து நீதிமன்றங்களில்  உயர்மத்திய தொழில் பாதுகாப்பு படை  பாதுகாப்புஅளிக்கப்படுகிறது என்று தெரிவித்திருந்தார்.  இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் உயர்நீதிமன்ற வளாகம் முழுவதும் சி.ஐ.எஸ்.எப். பாதுகாப்பு வழங்கவேண்டும் என்றும்  இதற்காக ஒரு திட்டத்தை தலைமை பதிவாளர் சக்திவேல் உருவாக்கவேண்டும் என்று தெரிவித்தனர். அந்த திட்டத்தை அமல்படுத்துவது குறித்து முடிவுக்கு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யவேண்டும் என்று ஆணையிட்ட நீதிபதிகள், இந்த வழக்கை முடித்து வைத்தனர்.

Related Posts