ஐசிசி டெஸ்ட் தரவரிசை: இந்தியா தொடர்ந்து முதலிடம்

 

ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் நீடித்து வருகிறது.

மே-01

டெஸ்ட் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசைப்பட்டியலை, ஐசிசி இன்று வெளியிட்டது. இன்று வெளியிடப்பட்டுள்ள ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. 

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி  125 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. 2-வது இடத்தில் இருந்து தென்ஆப்பிரிக்கா ஐந்து புள்ளிகள் இழந்து 112 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. தென்ஆப்பிரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் 13 புள்ளிகள் வித்தியாசம் உள்ளது. ஆஸ்திரேலியா நான்கு புள்ளிகள் அதிகம் பெற்று 106 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளது. நியூசிலாந்து 4-வது இடத்தையும், இங்கிலாந்து ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளது.

Related Posts