ஐசிசி பெண்கள் டி20 உலகக்கோப்பை, 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி.

Want create site? Find Free WordPress Themes and plugins.

ஐசிசி பெண்கள் டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது. ஐசிசி பெண்கள் டி20 உலகக்கோப்பை போட்டி மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்றது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனை டெனியல் வியாட் 43 ரன்களும், கேப்டன் நைட் 25 ரன்களும் அடித்தனர். மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேற இங்கிலாந்து 19புள்ளி4 ஓவரில் 105 ரன்னில் சுருண்டது. பின்னர் 106 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. தொடக்க வீராங்கனைகள் ஹீலி 22ரன்களும, மூனே 14 ரன்களும் எடுத்து  சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். அதன்பின் வந்த கார்ட்னெர் 33 ரன்களும், கேப்டன் லேனிங் 28 ரன்களும் அடிக்க 15 புள்ளி1 ஓவரில் 2விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா 4-வது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts