ஐட்ரோகார்பன், நியூட்ரினோ, அணுக்கழிவு கிடங்கு பேரழிவுத் திட்டங்களைத்தான் எதிர்க்கிறோம் – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  

ஐட்ரோகார்பன், நியூட்ரினோ, உயர்மின்கோபுரங்கள் அணுக்கழிவு கிடங்கு போன்ற பேரழிவுத் திட்டங்களைத்தான் எதிர்க்கிறோம் என்று  மதிமுக பொதுச்செயலார் வைகோ தெரிவித்துள்ளார்.

 

தமிழகத்தில்  ஈரோடு, கோவை, சேலம், திருப்பூர், தர்மபுரி, நாமக்கல் உட்பட 13 மாவட்டங்களில் விவசாய விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு 13 மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் காவல்துறை பாதுகாப்புடன் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை கண்டித்தும் பூமிக்கடியில் மின் வழித்தடங்களை அமைக்க வலியுறுத்தியும் டெல்லியில்  உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் 3 நாள் தர்ணா போராட்டம் இன்று தொடங்கியது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,  அனைத்து திட்டங்களையும் எதிர்த்தால் வளர்ச்சி எப்படி ஏற்படும் என்று சிலர் கேள்வி எழுப்புவதாக கூறுவதை சுட்டிக்காட்டி வள்ர்ச்சித் திட்டங்களை எதிர்க்கவில்லை என்று கூறினார். ஐட்ரோகார்பன், நியூட்ரினோ, உயர்மின்கோபுரங்கள், அணுக் கழிவு சேமிப்பு கிடங்கு  போன்ற பேரழிவுத் திட்டங்களைத் தான் எதிர்ப்பதாகவும் வைகோ தெரிவித்தார்.

Related Posts