ஐந்து மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்

கேரளா, தெலங்கானா, மகாராஷ்டிரா, ஹிமாச்சல பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக  குடியரசுத் தலைவர் மாளிகை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தெலங்கானா மாநிலத்திற்கு தமிழநாடு பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். கேரளா ஆளுநராக இருந்த சதாசிவம் மாற்றப்பட்டுள்ளார். இவருக்குப் பதில் ஆரீப் முகமது கான் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இமாச்சலப் பிரதேச மாநில ஆளுநராக இருந்த கல்ராஜ் மிஸ்ரா, ராஜஸ்தான் மாநில ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநில ஆளுநராக பகத் சிங் கோஷ்யாரி அறிவிக்கப்பட்டுள்ளார். இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் புதிய ஆளுநராக பா.ஜ.க. மூத்த தலைவர் பண்டாரு தத்தாத்ரேயா நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Posts